சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையில் உள்ள பெண்களை அனுதிக்க கூடாது என்ற பழக்கத்தை திருவாங்கூா் தேசவம் போர்டு கடைபிடித்து வந்தது. இந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 28 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கியது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து 
வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிமலை ஐயப்பன்கோயில் தேவசம் போர்டு மேல்முறையீடு செய்யும் என்றும் கூறப்பட்டது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தைப் போன்று, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தப்போவதாக கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் கூறி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்றே ஐயப்பன் கோயில் போராட்டம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா கட்சி அழைப்பு விடுத்திருந்தது இந்த நிலையில், சிவசேனா கட்சி தங்களது முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.