கன்னியாஸ்திரி ஒருவரை பாலியால் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஜலேந்தர் பிஷப் பிராங்கோ என்பவரை கேரள போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாஸ்திரி ஒருவரை பாலியால் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஜலேந்தர் பிஷப் பிராங்கோ என்பவரை கேரள போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ள, பூன்ஜார் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ வான ஜார்ஜ் கோட்டயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓபன் மைக்கில், பாதிக்கபட்ட கன்னியாஸ்திரியை பற்றி தவறாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். பாதிக்கப்பட்ட அந்த பெண் ஒரு "PROSTITUTE" என கூறி அனைவரையும் திகைக்க செய்து விட்டார். செய்தியாளர்கள் யாரும் இந்த பதிலை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. மேலும் இவ்வாறு கூறியதற்கு, ஏற்கனவே பாதிக்கபட்ட கன்னியாஸ்திரிக்காக போராட்டம் நடத்தி வரும் மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் அவர்களை கொதிப்படைய செய்து உள்ளது.

மேலும் தொடர்ந்து பேசிய சுயேட்சை எம்எல்ஏ ஜார்ஜ்..பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுவரை, குற்றம் சாட்டப் பட்ட பாதிரியாரால் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார். அப்படி என்றால், இதற்கு முன்னதாக 12 முறை தான் பாதித்த போது புகார் அளிக்காமல் அமைதியாக இருந்த அந்த பெண், 13 ஆவது முறை என கூறி இப்போது புகார் அளித்துள்ளது ஏன்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு கன்னியாஸ்திரி என்பவர், கன்னித்தன்மையை பெற்று இருக்க வேண்டும்...ஆனால் கன்னித்தன்மையே இல்லாமல் இருக்கும் அந்த நபரை எப்படி கன்னியாஸ்திரி என கூற முடியும்..? இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உடன், முதலில் தவறு பாதிரியார் மீது தான் என நினைத்தேன்..பின்னர் அலசி ஆராய்ந்த பின்னர் தான் தெரிகிறது இந்த பெண் மீது குற்றம் உள்ளது என்றும், அவர் தேவை இல்லாமல் உள்நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டு வருகிறார் எனவும் தெரிவித்து உள்ளார்.

அதே வேளையில் பாதிரியார் எந்த தவறும் செய்ய வில்லை என கூற வில்லை, அதற்காக பாதிரியார் மட்டுமே தவறு செய்து விட்டதாக கூற முடியாது என தெரிவித்து உள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு தரப்பினர் கண்டன குரல்களை எழுப்பி உள்ளனர்.