கேரளாவில் ஆளும் கட்சி எம்எல்ஏ மீது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அக்கட்சியைச் சேர்ந்த பெண் புகார் கூறியுள்ளார். இந்த புகாரை விசாரிக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. 

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் சோர்நுர் தொகுதியின் எம்.எல்.ஏ., பி.கே.சசி இருந்து வருகிறார். இவர் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்த புகாரை மேலிடத்திற்கும் அனுப்பியுள்ளார். 

மேலும் இந்த விவகாரத்தை கட்சியின் மாநில நிர்வாகம் சரிவர கண்டுகொள்ளவில்லை. 2 வாரங்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி நடைபெறுவதாக என கட்சியின் மத்திய நிர்வாகம் கருதுகிறது.

 

எனவே, மாநில நிர்வாகம் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகார் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  எம்.எல்.ஏ., பி.கே.சசி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.