தனது தாய்க்கு 2 வது திருமணம் வைத்துவிட்டு மகன் வாழ்த்துக்கூறிய முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தாயின் மறுமணம் குறித்து உருகவைக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருவது மட்டுமல்லாமல் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. 

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். இவரது தயை தந்தை பல பல கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சில வருடங்களில் கணவனைப் பிரிந்து தனது மகனோடு வந்த அந்த பெண், தனது மகனை கஷ்டப்பட்டு வளர்த்து, பொறியியல் படிப்பு படிக்க வைத்துள்ளார். 

தனது மகன் கல்லூரி படிப்பை முடித்துள்ள நிலையில் தற்போது அவர் 2 வது திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது மகன் கோகுல் ஸ்ரீதர் வாழ்த்துக்கூறிய முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  தனது தாயின் மறுமணம் குறித்து உருகவைக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருவது மட்டுமல்லாமல் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

தன்னுடைய தாயின் மறுமணம் குறித்து  அவர்  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்புணர்வுடன் யாரும் இந்த பதிவைப் படிக்க வேண்டாம் என்றும், அப்படியே நீங்கள் வெறுப்புடன் பார்த்தாலும் அது எங்களை எந்த வகையிலும் இழிவுபடுத்தாது.

எனக்காகத் தனது வாழ்க்கை முழுவதுமாக அர்ப்பணித்தவர் எனது தாய், அவரது வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தவர். ஒரு முறை என் தந்தை என் தாயைப் பலமாகத் தாக்கிவிட்டார், என் தாயின் தலையிலிருந்து நிறைய ரத்தம் வழிந்தது. அப்பொழுது நான் என் தாயிடம் நான் கேட்ட கேள்விக்கு அதற்கு அவர் அளித்த பதில் இன்னும் என் நினைவில் உள்ளது.

ஏன் இன்னும் இந்த உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு பதிலளித்த என் தாய், நான் உனக்காக மட்டுமே வாழ்கிறேன், அதற்காக இந்த கஷ்டங்களை எல்லாம் நான் பொறுத்துக்கொள்வேன் என்றார். அப்போது எனது தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே தனியாக வந்தவன் தான் நான்.

எனக்காக தன்னுடைய இளமையையும், கனவுகளையும் அவர் விலக்கி வைத்தார். இதற்கு மேல் எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இனியும் அவரது திருமணம் விவகாரத்தில் ரகசியம் காக்க  விரும்பவில்லை. அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தான் பல காலமாக விரும்பினேன்.  அவர் மேன்மேலும் பல உயரங்களுக்கு செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார்.