காதலித்து திருமணம் செய்து கொண்ட பலரும் கூட கடைசியில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கும் காட்சிகளை பார்க்கும் போது காதலை குறித்த சரியான புரிதல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இல்லையோ? என்ற எண்ணம் தான் மக்கள் மனதில் எழுகிறது. 

ஆனால் அப்படி இல்லை இன்றைய இளம் தலைமுறையில் காதலுக்கே இலக்கணம் வகுப்பது மாதிரியான ஜோடிகளும் இருக்கின்றனர் என நிரூபித்திருக்கின்றனர் கேரளாவை சேந்த இந்த இளம் ஜோடிகள்.  கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேந்த பவ்யா மற்றும் சச்சின் ஆகிய இருவரும் , அப்பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. 

இவர்கள் காதலிக்க துவங்கி 2 மாதங்களுக்கு பிறகு திடீரென பவ்யாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போயிருக்கிறது.
அப்போது தான் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் கேன்சர் இருப்பது தெரியவந்திருக்கிறது. அவருக்கு இருக்கும் இந்த பிரச்சனையை அறிந்த பிறகு தான அவரை அதிகம் நேசிக்க துவங்கி இருக்கிறார் சச்சின். 

தொடந்து பவ்யாவிற்கு எப்போதும் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுத்த சச்சின் , ஒவ்வொரு முறையும் பவ்யா கீமோ தெரஃபி எடுத்துக்கொள்ளும் போதும் உடன் துணை நின்றிருக்கிறார். தெரஃபி முடிந்த பிறகு கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி கோவிலில் வைத்து பவ்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் சச்சின். 

பெரிய அளவிலான பணவசதி இல்லாத நிலையில் சச்சின் தினக்கூலி மாதிரியான பணிகளை மேற்கொண்டு தான் தங்கள் குடும்பத்தை நடத்த உழைத்து வருகிறார். வேறெங்காவது போய் படித்த படிப்பிற்கு வேலை தேடலாம் தான் ஆனால் பவ்யாவிற்உ துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தனக்கு மேற்படிப்பு படிக்க கிடைத்த வாய்ப்பினையும் கூட ஒதுக்கிவிட்டு தன் காதல் மனைவிக்கு அவரின் கஷ்டமான நேரத்தில் துணை நிற்கிறார் சச்சின். 

இந்த பாதிப்பிற்கு பிறகு பவ்யாவின் உடல் எடை கூடி விட்டது. அவரின் அழகான கூந்தலையும் அவர் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நான் அவரின் மனதை தான் நேசித்தேன். என் கண்களுக்கு பவ்யா எப்போதுமே அழகாக தான் தெரிகிறார். இப்போதும் அவர் இந்த தோற்றத்தை விரும்பும் அளவு அவரை பக்குவப்படுத்த தான் நான் முயன்று வருகிறேன் . கண்டிப்பாக இந்த அன்பினாலும் இறைவன் அருளாலும் பவ்யா கண்டிப்பாக உடல் நலம்தேறி வருவார், என நம்பிக்கையுடனும் காதலுடனும் தெரிவித்திருக்கிறார் சச்சின்.