Asianet News TamilAsianet News Tamil

ஒரு கண்ணை தோண்டி... அந்தரங்க உறுப்பில் தாக்கி கொன்ற கொடூரம்! காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் நடந்த ஆணவக்கொலை!

Kerala man found dead two days after wedding brides parents under suspicion
Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion
Author
First Published May 29, 2018, 4:46 PM IST


2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆவணப்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழகத்தை உலுக்கிய உடுமலைப் பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்குத் தூக்கு தண்டனை உத்தரவிட்டது திருப்பூர் நீதிமன்றம் .

இந்நிலையில், சாதி மறுப்பு காதல் காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில், பெண்ணின் அண்ணன் ஆள் வைத்து கொடூரமாக ஆணவப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப் அதே பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். கெவின் ஜோசப், அமலாகிரியில் உள்ள பி.கே. கல்லூரியைச் சேர்ந்த மாணவி நினுவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். கெவின் குடும்ப வறுமை காரணமாக வயரிங் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற பின் ஓராண்டுக்கு முன்னர் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicionபணி வீசா முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி இந்தியா வந்த கெவின்-நினு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்குப் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய நினு நண்பர்கள் முன்னிலையில் கெவின்னை பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு 1.30மணியளவில் கெவின், மர்ம கும்பலால் கடத்தப்பட்டார்.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion

இந்நிலையில், தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் கெவின் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு கெவின் பலமாகத் தாக்கப்பட்டு கிடந்துள்ளார். உடனடியாக பிணம் கிடந்த ஏரிக்கு சென்று உடலைக் கைப் பற்றி கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக நினுவின் சகோதரர் ஷானு, அவரது நண்பர்கள் ரியாஷ், நியாஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள்.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion

காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் அரங்கேறிய இந்த கொலைச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு அன்று காலை நினு மற்று ஜோசப் இருவரும் கெவினை நினுவின் சகோதரர் ஷானு கடத்திச் சென்றதாக காந்திநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். ஆனால் அன்று கேரளா முதல்வர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரவிருந்ததால் அதன் பரபரப்பில் இந்தப் புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர்.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion

இந்தச் சம்பவத்தையடுத்து காந்திநகர் இன்ஸ்பெக்டர் சிபு, சப்-இன்ஸ்பெக்டர் சன்னிமோன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது ரபீக் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தக் ஆணவக் கொலையைக் கண்டித்து இன்று கோட்டயம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Kerala man found dead two days after wedding, bride’s parents under suspicion

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் கெவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கெவின்னை கொலை செய்வதற்கு முன்பாக, கம்பியாலும், மரத்தாலாக தடியாலு பலமாக தாக்கியிருக்கிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கண் தோண்டி எடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அந்தரங்க உறுப்பிலும் பலமாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாமல் துடிதுடித்து இறந்த  கொடூரமாக கொலை செய்யப்பட்டு கெவின் உடலை சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் வீசியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios