Kerala Lok Sabha Election Result 2024 LIVE : மும்முனை போட்டி - கேரளாவை கைப்பற்றுவது யார்.?
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலை வகித்து வருகிறார்.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. ஆனால் பல்வேறு கருத்துக்கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கணித்துள்ளன.
18வது மக்களவைக்கான 2024 பொதுத் தேர்தலில் கேரளாவில் ஒட்டுமொத்தமாக 71.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. கேரளாவில் வடகராவில் இருந்து கே.கே ஷைலஜா, வயநாட்டில் இருந்து ராகுல் காந்தி, பத்தனம்திட்டாவில் இருந்து அனில் அந்தோணி, திருவனந்தபுரத்தில் இருந்து சசி தரூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் அட்டிங்கலில் இருந்து வி முரளீதரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள்.
காசர்கோடு (GEN), கண்ணூர் (GEN), வடகரா (GEN), வயநாடு (GEN), கோழிக்கோடு (GEN), மலப்புரம் (GEN), பொன்னனி (GEN), பாலக்காடு (GEN), ஆலத்தூர் (SC), திருச்சூர் (GEN), சாலக்குடி (GEN), எர்ணாகுளம் (GEN), இடுக்கி (GEN), கோட்டயம் (GEN), ஆலப்புழா (GEN), மாவேலிக்கரா (GEN), பத்தனம்திட்டா (GEN), கொல்லம் (GEN), அட்டிங்கல் (GEN) மற்றும் திருவனந்தபுரம் (GEN) ஆகும்.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - ஐயுஎம்எல் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.