கேரளாவில் மீன் விற்றதற்காக விமர்சிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான், இவர் தொடுபுழாவில் ஒரு கல்லூரியல் 3-ம் ஆண்டு வேதியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். தனது படிப்பு செலவிற்காக மாலை நேரங்களில் சீருடையில் மீன் விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேரள முதல்வர் மாணவி ஹனானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து இவருக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்தனர். 

அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மீன் விற்று நிதியை கொடுத்தார். மேலும் ஹனான் படிப்பிற்கு இடையே மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நேற்று காலை காரில் கொச்சிக்கு புறப்பட்டார். 

அப்போது ஒருவர் காரின் குறுக்கே திடீரென ஒருவர் பாய்ந்தார். சுதாரித்துக்கொண்ட டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அப்போது கார் மின் கம்பத்தில் மோதியது. இதில் ஹனான் காலிலும், முதுகெலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே ஹனான் கொடுங்கல்லூர் தனியார் மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.