கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன அமீது இவர் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படத்தை படித்து வருகிறார்.மேலும் குடும்ப வறுமை காரணமாகவும் தம்பியை எப்படியாவது படிக்கச் வைக்க வேண்டும் என்பதற்காகவும் பகுதி நேரமாக மீன் விற்று வந்தார்.அதை போட்டோ எடுத்து ஒரு வாலிபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அதில் எழுந்த விமர்சனம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

பின்னர் இவரின் நிலைமையை அறிந்து அவருக்கு உதவு பலரும் முன்வந்தனர். பட வாய்ப்பும் கிடைத்தது, மேலும் சிறப்பு விருந்தினராக பல நிகழ்சிக்கு கூட சென்று வந்தார். அவ்வாறு ஒரு நிகழ்ச்சி முடிந்து வரும் போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அதில் முதுகு தண்டுவடம் முறிவு ஏற்படவே தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் தான் எர்ணாகுளம் பகுதியில் தான் சொந்தமாக மீன் கடை திறக்க வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால் கடை உரிமையாளரும்  ஹனனின் உறவினருக்கும் ஏற்கனவே பிரச்சனை என்பதால் இவர் கடையை நடத்துவதில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பின்னர் இந்த முடிவை கைவிட்ட ஹனன், தற்போது ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்து உள்ளார்.

இந்த திட்டத்தை தொடங்கிய நாளில் மட்டும் 3500  ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது. தான் மீன் விற்றுக்கொண்டே அடுத்ததாக எம்பிபிஎஸ்  படிப்பை படிக்க வேண்டும். அதுதான் என் ஆசை என அவர் தெரிவித்து  உள்ளார். இவருக்கு மேலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.