Asianet News TamilAsianet News Tamil

உதவிய மக்களுக்கே ரூ.1.5 லட்சம் திருப்பி கொடுத்த மீன் விற்ற மாணவி...! மனமுருகி கண் கலங்கும் ஹனன்..!

கேரளாவில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கில் தனது உடைமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, கடந்த மாதாம் அதே கேரளாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான மீன் விற்று கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்த ஹனான் அமித்1.5 லட்சம் ரூபாயை கொடுத்து அனைவரையும் கண்ணீர் மல்க வைத்து உள்ளார்.

kerala girl hanan donates 1.5 lakh to affected people in kerala
Author
Kerala, First Published Aug 18, 2018, 1:18 PM IST

தனக்கு உதவிய மக்களுக்கு இப்போ வீடு கூட இல்லையே : மீன் விற்ற மாணவி ஹனன் 

கேரளாவில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கில் தனது உடைமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, கடந்த மாதம் அதே கேரளாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான மீன் விற்று கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்த ஹனன் அமித் 1.5 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட  மக்களுக்கு கொடுத்து  அனைவரையும் கண்ணீர் மல்க வைத்து உள்ளார்.
 
தான் மீன் விற்று கல்லூரி படிப்பை தொடர்ந்த ஹனன் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு வாலிபர் ஒருவர் கிண்டலாக பதிவு செய்து இருந்தார்.இந்த போட்டோ வைரலாக பரவியது. அப்போது, தனிப்பட்ட கவனத்தை ஈர்த்த ஹனனுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். மேலும் அவரை பற்றி யாராவது கிண்டல் செய்து பதிவு செய்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து ஹனனுக்கு அவரது வங்கி கணக்கில், நல்ல உள்ளங்கள் RS.2000,RS.500 என டெபாசிட் செய்ய தொடங்கினர். சிறு சிறு தொகை அதிகமாகி தற்போது அவருக்கு கிடைத்த ஒன்றரை லட்சம் ரூபாயை, வீடு இழந்து உடுக்க உடை இல்லாமல் தவித்து வரும் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவ முதல்வரிடம் செக் கொடுக்க உள்ளார்.

kerala girl hanan donates 1.5 lakh to affected people in keralaதற்போது சாலைகள் மூடப்பட்டு உள்ளதாலும், நெட்வொர்க் கிடைக்காமல் இருப்பதாலும், அருகில் உள்ள வங்கிகள் மூடப்பட்டு உள்ளதாலும் தன்னால் அந்த தொகையை வங்கியில் செலுத்த முடியவில்லை. எனவே இன்று மாலைக்குள் அல்லது நாளைக்கும் முதல்வரை சந்தித்து செக் கொடுக்க உள்ளதாக மாணவி தெரிவித்து உள்ளார்.

kerala girl hanan donates 1.5 lakh to affected people in keralaதன்னுடைய அம்மாவையும், தன் தம்பியையும் கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் உழைத்து அவர்களை காப்பற்றி வந்த மாணவி மீது ஏற்பட்ட பரிதாபம் மற்றும் அவருடைய நல்ல எண்ணத்திற்கு கொடுக்கப்படும் மரியாதையாக அந்த மாணவியை வாழ்த்தினர் மற்றும் உதவினர்.

ஆனால் இன்று தனக்கு உதவிய நல்ல உள்ளங்கள் கூட வெள்ளத்தால் வீடு இழந்து உடைமைகளை இழந்து தவித்து வரும் அதே மக்களுக்கு தன்னிடம் இருந்த கடைசி தொகையான ஒன்றரை லட்சம் ரூபாய் முழுவதையும் மக்களுக்கே கொடுத்து உதவிய ஹனனுக்கு வாழத்துக்கள் குவிய தொடங்கி உள்ளது 
 

Follow Us:
Download App:
  • android
  • ios