அடித்தது ஜாக்பாட்... வெள்ள பாதிப்பின் போது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு காரை தொடர்ந்து வீடு பரிசு!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 14, Sep 2018, 8:12 AM IST
kerala Floods...Jaisal fisherman Gifted a House
Highlights

கேரளாவில் கடுமையான வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. முதலில் மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் வழங்கப்பட்டது. பிறகு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. 

கேரளாவில் கடுமையான வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. முதலில் மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் வழங்கப்பட்டது. பிறகு இஸ்லாமிய அமைப்பு ஒன்று புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

 

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் 14 மாவட்டங்களும் வெள்ள நீரால் சூழந்தது. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிட மீட்புக்குழுவினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். முக்கியமாக மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. வெள்ளத்தால் சூழந்ததால் மக்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். 

பின்பு ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நிவாரண பணிகள் தீவிரமாக நடைப்பெற்றன. அப்போது கேரள மீனவர்கள் மீட்பு பணிகளில் பெரும் உதவியாய் இருந்தனர். குறிப்பாக, வெள்ள பாதிப்பின் போது ஜெய்ஷால் என்ற மீனவர், தனது முதுகை படிக்கட்டாக்கிக் கொள்ள, பெண்கள் அவர் மீது ஏறி படகில் அமர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது. ஜெய்ஷாலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் முதுகை படிக்கெட்டாக்கிய மீனவர் முதுகை ஜெய்ஷாலுக்கு இஸ்லாமிய அமைப்பு புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. தன்னுடைய வாழ்வில் தனக்கு சொந்த வீடு கிடைக்கும் என தான் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை என ஜெய்ஷால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவரது மீட்புப் பணியைப் பாராட்டி கோழிக்கோட்டைச் சேர்ந்த மகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

loader