கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன.

இதனிடையே கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. காட்டு யானை ஒன்று கடந்து செல்வதற்காக அணை மதகுகளை மூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சாலுக்குடி ஆறு ஓடுகிறது. இதன் குறுக்கே பெருங்கல்குத்து அணை கட்டப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், ஆகஸ்ட் 9-ம் தேதி அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

இந்த ஆற்றின் இடையே காட்டுப்பகுதியில் யானை ஒன்று ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வந்தது. இதனை அறிந்த வனத்துறை ஊழியர்கள் உடனே அணை பராமரிப்பு ஊழியர்களை தொடர்பு கொண்டு அணை மதகுகளை மூட வேண்டும் என கூறினர். உடனே மதகுகளை மூடப்பட்டது. 4 மணிநேரத்திற்கு பிறகு ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. யானையும் அப்பகுதியை கடந்து சென்றது. இதனையடுத்து அணையின் மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டது.