கேரளா அரசே https://donation.cmdrf.kerala.gov.in/ என்ற தனி ஆன்லைன் டொனேஷன் போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இந்த வெப்சைட்டை பயன்படுத்தி கேரளா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் உதவலாம்.
அளவில் சிறிய மாநிலமான கேரளாவில் ஏறக்குறைய 14 மாவட்டங்கள் உள்ளன. இந்த 14 மாவட்டங்களில் 10 ற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். அங்குள்ள மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
1924 ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேரளா அரசு கடந்த சில நாட்களில் மட்டும் 27 க்கும் மேற்பட்ட அணைகள் கேரளாவில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லால் 15 க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து 180 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 20000 ற்கும் மோர்மட்ட வீடுகள் அடைந்து தரைமட்டமாக்க ஆகியுள்ளது.
200 க்கும் மேற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 10000 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான ஒரு சம்பவத்தினை வாழும் தலைமுறை கண்டதில்லை என்ற அளவிற்கு அங்கு இயற்கை, மக்கள் மத்தியில் விளையாண்டு வருகின்றது.
இந்த சம்பவங்களால் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், தங்களது உடைமைகளையும் இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். இது வரை ஏற்பட்ட வெள்ள சேதங்கள் மட்டும் 8316 கோடி என கேரளா அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசோ வெறும் 100 கோடியை வெள்ள நிதியாக அறிவித்துள்ளது. வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு சக மனிதர்கள் தான் உதவ வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு பல தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பண்ணத்தைப் பெற்றுவருகின்றனர். ஆனால், அந்த பணம் சரியான முறையில் மக்களிடம் சென்று செருகின்றதா என்பதை நாம் அறிவதில்லை. இதற்க்காக தான் கேரளா அரசே https://donation.cmdrf.kerala.gov.in/ என்ற தனி ஆன்லைன் டொனேஷன் போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இந்த வெப்சைட்டை பயன்படுத்தி கேரளா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் உதவலாம்.
