கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!!
கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
கேரளாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஏப்ரல் 24) கொச்சி வந்தார். ஐஎன்எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து இளைஞர்கள் மாநாடு நடைபெறும் இடம் வரையிலான 2 கிமீ பாதையின் இருபுறமும் இருந்த மக்களை நோக்கி கேரள பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி கை அசைத்தார்.
பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு மேல் கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கினார். அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருந்தது. இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இதன் 15ஆவது சேவையாக திருவனந்தபுரம் - காசர்கோடு வரை இயக்கப்படுகிறது.
மேலும், இந்த வந்தே பாரத் ரயில்கள் ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும்.திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே 501 கி.மீ. தூரத்தை கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தாண்டி செல்லும்.
சுமார் 501 கி.மீ தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும். திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர் செல்ல இந்த ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இத்தனை வசதிகளை கொண்ட இந்த ரயில் சேவையை வரும் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலுக்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 17ஆம் தேதி நடந்தது. இந்த ரயிலின் எண் 20633 / 20634 ஆகும். 20633 ரயில் எண் காசர்கோடு திருவனந்தபுரம் சென்ட்ரல் வரையும் 20634 எண் கொண்ட ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் காசர்கோடு வரையும் இயக்கப்படுகிறது. இவை வியாழக்கிழமைகளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படும்.
காசர்கோடு வந்தே பாரத் ரயிலானது காசர்கோடில் இருந்து 26 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 22.35 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும். அது போல் திருவனந்தபுரத்திலிருந்து 28 ஆம் தேதி காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் அன்று மதியம் 13.25 மணிக்கு காசர்கோடை சென்றடையும். வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க..அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!
இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்