கேரளா படகு விபத்தில் 22 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவிப்பு.!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் 40 பேருடன் சென்ற சுற்றுலா சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் 40 பேருடன் சென்ற சுற்றுலா சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீரில் மூழ்கிய 20 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- கர்நாடகா தேர்தல் 2023: காங்கிரஸ் வளர்ச்சி பேனாவிலும், பேப்பரிலும் மட்டுமே இருக்கு - பிரதமர் மோடி தாக்கு
இந்த படகில் 25 பேர் ஏற்ற வேண்டிய படகில் 40 பேர் வரை ஏற்றியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சொகுசு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- Breaking: நீரில் மூழ்கிய சுற்றுலாப் படகு.. குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழப்பு..கேரளாவில் நிகழ்ந்த சோகம்!!
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கேரளா மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் பொதுமக்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.