திருவனந்தபுரம் தெற்கு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்த பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், தலைவர்களை உருவாக்குவதை விட மக்கள் தொண்டர்களை உருவாக்குவதில் பாஜக கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.
அரசியல் தலைவர்களை உருவாக்குவதோ அல்லது தானே தலைவராக மாறுவதோ அல்ல, மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் தொண்டர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என்று கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக திருவனந்தபுரம் தெற்கு மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய சந்திரசேகர், கட்சியின் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் மக்கள் உதவி மையங்களாகச் செயல்படும் என்றார்.
தினமும் ரூ.6 கோடி நன்கொடை! 3வது முறையாக அம்பானியை மிஞ்சிய சிவ் நாடார்!
பிரதமர் மோடி வருகை:
மே 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்துக்கு வருகைதர உள்ளதாகவும், இது கட்சிக்கும் கேரள மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் அவர் கூறினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் கேரளாவில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று சந்திரசேகர் கூறினார். புதிதாகத் திறக்கப்பட்ட மாவட்ட அலுவலகங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுக்கும் செயல் மையங்களாக இருக்கும் என்றார். உள்ளாட்சித் தேர்தல்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களே எதிர்கால சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உருவாகுவார்கள் என்றும், மக்களின் நம்பிக்கையைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெறுவதே பாஜகவில் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறும் வழி என்றும் அவர் எடுத்துரைத்தார்.
யார் தகுதியானவர்?
பாஜகவில் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆவதற்கான ஒரே தகுதி மக்களின் அங்கீகாரம்தான் என்று சந்திரசேகர் கூறினார். “யார் தலைமை தாங்கத் தகுதியானவர் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்” என்றார்.
கேரளாவின் மற்ற அரசியல் கட்சிகளைக் குறைகூறிய சந்திரசேகர், இடது ஜனநாயக முன்னணிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் உண்மையான வித்தியாசம் இல்லை என்றார். “இருவரும் மக்களிடையே எதிர்மறையானதைப் பரப்புவதிலேயே ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், பாஜக அனைவருடனும் நின்று அனைவருக்காகவும் உழைக்கும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்களின் கட்சியாக உள்ளது" என்றார்.
மே 2ஆம் தேதி விழிஞ்சத்தில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கூறி தனது முடித்தார். திருவனந்தபுரம் தெற்கில் வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மண்ணை விஷமாக்கும் உலோக மாசுபாடு! 1.4 பில்லியன் மக்களுக்கு ஆபத்து!
