kejriwal supports gopala krishna gandhi for vice president

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் கோபால் கிருஷண காந்திக்கு ஆதரவு அளிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்துள்ள நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 5-ந்தேதி நடக்க இருக்கிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஆளும் பாஜக சார்பில் வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால்கிருஷண்ன காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

கோபால்கிருஷ்ண காந்தி தனக்கு ஆதரவு கேட்டு முக்கிய தலைவர்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் டெல்லி முதலமைச்சரும் , ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சி கோபால்கிருஷ்ண காந்திக்கு ஆதரவாக துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்’’ என்று டுவிட்டர் மூலம் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளரான மீரா குமாரை கெஜ்ரிவால் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.