katju talks about kulbhusan jadhav
இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனை
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
நிறுத்திவைப்பு
இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது.

கட்ஜூ கருத்து
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடி வெற்றி கண்டது கொண்டாடப்பட்டது. ஆனால், இதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ என கூறி உள்ளார்.
மிகப்பெரிய தவறு
இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், “ இந்தியர் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை நா்டி அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த செயலை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி மிகப்பெரிய தவறை செய்து உள்ளது.
உண்மையான காரணம்?
பாகிஸ்தான் பல்வேறு பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்தில் எழுப்ப இந்தியா வழிவகை செய்து கொடுத்து உள்ளது.
இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியதில் பாகிஸ்தான் அதிக எதிர்ப்பு தெரிவிக்காததற்கு இதுவே உண்மையான காரணம்.
காஷ்மீர் பிரச்சினை.
நாம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியதில் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடையும், நாம் இப்போது வரையில் எதிர்ப்பு தெரிவிக்கும் காஷ்மீர் விவகாரம் உட்பட பிற பிரச்சனைகளை பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வௌியிட்டுள்ளன.
