உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ தான் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் 

போன்வற்றை கொண்டாடுவதில்லை என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்டவற்றை கொண்டாட என்ன காரணம் இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள மார்க்கண்டேய கட்ஜூ இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா?வேலையின்மை தீர்ந்து விட்டதா? நம் மக்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்கின்றார்களா, அவர்களுக்கு 

சுகாதாரம், சிறப்பான கல்வி மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றதா?என அவர் தனது பேஸ்புக்

பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களில் 75 சதவிகிதம் பேர் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும், பாதிக்கும் மேற்பட்ட நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுஉள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் எனக்கு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களை கொண்டாட மனது

வரவில்லை என நெகிழ்ச்சியுடன் மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா கொண்ட்டங்களில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் நான் இதில் கலந்து கொள்வேன் என எதிர்பார்க்காதீர்கள் என தெரிவித்துள்ளார்,

எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும் தரமான வாழ்க்கையை வாழும் போது நான் குடியரசு மற்றும் சுதந்திர தினம் 

உள்ளிட்டவற்றை கொண்டாடுகிறேன். நான் இறந்த பின்தான் இந்நிலை ஏற்படும் என்பதில்நான்

உறுதியாக இருக்கிறேன், அப்போது வானத்தில் இருந்து எனது வாழ்த்துக்களை வழங்குவேன் எனவும்

கட்ஜு தெரிவித்துள்ளார்.