Asianet News TamilAsianet News Tamil

சட்ட விரோத பணபரிவர்த்தனை.. பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,  தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kashmiri Separatist Yasin Malik convicts...NIA court verdict
Author
Delhi, First Published May 19, 2022, 1:53 PM IST

சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,  தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kashmiri Separatist Yasin Malik convicts...NIA court verdict

இதனிடையே, கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி என்ஐஏ நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Kashmiri Separatist Yasin Malik convicts...NIA court verdict

அதில், யாசின் மாலிக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கான தண்டனை விவரம் வரும் 25-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios