ஜம்மு காஷ்மீர் அருகே தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட மன்ஸ்போரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை ராஷ்டரிய ரைபிள்ஸ் மற்றும் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் நேற்று சுற்றிவளைத்தனர்.

இதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். 

விடிய விடிய நடைபெற்ற இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.