இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, மறு வரையறைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிபுணர்கள் உதவியுடன் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. 

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் வெற்றி பெற்றதாக பாஜக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக அரசு தோற்றுவிட்டது என வரலாறு நிரூபிக்கும் என்றார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்டப்பேரவை அதிகாரத்தை நாடாளுமன்றம் கையில் எடுத்துள்ளது. மாநில உரிமைகள் பறிப்பின் உச்சக்கட்டமாக காஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது. 

இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டு மக்கள் பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து விழித்தெழ வேண்டும். இந்திய வரலாற்றில் இது துக்க தினம். மத்திய அரசின் இந்த முடிவை இந்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். இவரது இந்த கருத்துக்கு மாநிலங்கள் அவையில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.