ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள உள்ள ஷெர்-ஐ-காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய அவர், ‘’கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களின் உணவு, உடைகள் மற்றும் இருப்பிடம் குறித்து எந்தவித கவனமும், இங்குள்ள தலைவர்கள் செலுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடையாளம் எந்த விதத்திலும் ஆபத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். காஷ்மீரில் பிரிவு 370 நீக்கப்பட்டதால், இங்கு உள்ள மக்களின் அடையாளம் இழக்கப்படும் என்று யாரும் கவலைப்படக்கூடாது. மாநில மக்கள் அனைவருக்கும் பிரதிநிதிகள் கிடைக்கும்.

லேவில் உள்ள விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  இது தவிர, கார்கில் வணிக விமான நிலையத்திற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. அடிமட்ட ஜனநாயகம் மூலம் மக்களை மேம்படுத்துவதே அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று.ஜும்மே தொழுகைக்குப் பிறகு அடிக்கடி கல் வீசும் சம்பவங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அலைந்து திரிந்த இளைஞர்கள் விரைவாக பிரதான நீரோட்டத்திற்கு திரும்பி வருகின்றனர். எல்லையைத் தாண்டி ஊடுருவலைத் தடுக்க பன்முக அணுகுமுறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

காஷ்மீர் பண்டிதர்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையவில்லை. பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிதர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் காஷ்மீர் திரும்புவது அனைவரின் ஆதரவால் மட்டுமே சாத்தியமாகும்’’ என்று அவர் கூறினார்.