Asianet News TamilAsianet News Tamil

மகாராஷ்டிரா கர்நாடகா இடையே தொடரும் எல்லைப் பிரச்சனையும், காரணங்களும்!!

அடுத்த வாரம் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Karnataka vs Maharashtra: What is the border dispute between 2 states?
Author
First Published Nov 25, 2022, 1:56 PM IST

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காலம் காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை காரணமாக, எங்களது நிலத்தில் ஒரு அடி கூட விட்டுத் தர மாட்டோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்றை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அடுத்த வாரம் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு தகுந்த பதிலை நாங்களும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். எங்களுக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று பொம்மை தெரிவித்து இருக்கிறார். உச்ச்நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திலும், எல்லை மேம்பாடு ஆணையத்திலும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்கள் மறுவரையமைப்பு சட்டங்களுக்குப் பின்னர் எல்லைப் பிரச்சனை முடிந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா அரசு மீண்டும் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளது. எல்லையில் கிராமப் பஞ்சாயத்து தீர்வு மற்றும் தொடர்பான விஷயங்கள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இவற்றை சமர்ப்பிப்போம் என்று பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

Bhagat Singh Koshyari: மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பதவி பறிப்பா? அவசரமாக டெல்லிக்கு அழைப்பு: காரணம் என்ன?

எல்லை விஷயத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ''மகாராஷ்டிராவில் இருந்து ஒரு கிராமம் கூட கர்நாடகாவுடன் இணைவதற்கு அனுமதிக்க மாட்டோம். மராத்தி நிலங்களான பெலகாவி, நிபானி, கார்வர் ஆகிய கிராமங்களை உச்ச நீதிமன்றத்தை அணுகி பெறுவோம்'' என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் பொம்மையும், ''பட்னவிஸ் கனவு ஒருபோதும் நிறைவேறாது. நிலம், தண்ணீர், எல்லைகளை பாதுகாக்க கர்நாடகா அரசு கடமைப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

எல்லைப் பிரச்சனை என்ன?
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சனை 1960 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதில் இருந்து நீடிக்கிறது. இந்த தகராறு பெரும்பாலும் பெலகாவி அல்லது பெல்காவ் எல்லைத் தகராறு என்று குறிப்பிடப்படுகிறது, அங்கு மகாராஷ்டிரா பெல்காம் (பெலகாவி என்றும் அழைக்கப்படுகிறது) மாவட்டத்தையும், தென் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 80 மராத்தி மொழி பேசும் கிராமங்களையும் திரும்பப் பெற போராடி வருகிறது. 
மகாராஷ்டிரா அரசாங்கத்திடமிருந்து 23 ஜூன் 1957- ல் பெறப்பட்ட ஒரு குறிப்பைத் தொடர்ந்து, பெலகாவியை மறுசீரமைப்பது குறித்து முடிவெடுக்க இந்திய அரசாங்கம் 5 ஜூன் 1960 அன்று மகாஜன் குழுவை அமைத்தது. குழு அமைக்கப்பட்டபோதும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை, இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

Aadhar Card:ஆதாரை அட்டையை அப்படியே ஏற்காதிங்க! ஆய்வு செய்யுங்க! மாநிலங்களுக்கு UIDAI அறிவுறுத்தல்

சூழல் வளர்ச்சி:
2004 ஆம் ஆண்டு அப்போதைய மகாராஷ்டிர அரசு பெலகாவி மற்றும் 865 கிராமங்களுக்கு உரிமை கோரியபோது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. கடந்த திங்கள்கிழமை கர்நாடக முதல்வர் பொம்மை, உச்ச நீதிமன்றத்தில் எல்லைப் பிரச்சனை ஏற்படும்போது, அதைச் சமாளிக்க மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு வலிமையான சட்டக் குழுவை மாநிலம் அமைத்துள்ளது என்று தெரிவித்து இருந்தார். 

இதைத் தொடர்ந்து, செவ்வாய் கிழமை, மகாராஷ்டிர அரசு, சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் ஷம்புராஜ் தேசாய் ஆகியோரை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்தில் மாநில சட்டக் குழுவுடன் ஒருங்கிணைக்க நியமித்துள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிராவில் 19 பேர் கொண்ட குழு, இந்த விவகாரத்தில் விசாரணையை விரைவுபடுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios