Bhagat Singh Koshyari: மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பதவி பறிப்பா? அவசரமாக டெல்லிக்கு அழைப்பு: காரணம் என்ன?

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து பேசிய கருத்துக்கள் மாநிலத்தில் பெரிய அரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அவசராக டெல்லிக்கு வரக்கூடி ஆளுநர் கோஷ்யாரிக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

Maharashtra Governor Koshyari summoned to Delhi: what is the reason behind?

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து பேசிய கருத்துக்கள் மாநிலத்தில் பெரிய அரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அவசராக டெல்லிக்கு வரக்கூடி ஆளுநர் கோஷ்யாரிக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரும் பங்கேற்றனர். 

ஜல்லிகட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை தொடங்கியது

அப்போது பேசிய ஆளுநர் கோஷ்யாரி “ நவீன இந்தியா என்ற கருத்தை முன்வைத்தது சத்ரபதி சிவாஜி மகராஜா. பகத் சிங், கிராந்திசின் நானா பாட்டீல், நேதாஜி, ஷானு மகராஜ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு ஊக்கமாக இருந்தார். சிவாஜியின் கருத்துக்கள் பழமையாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இன்று இளைஞர்களுக்கு அம்பேத்கரும், நிதின் கட்கரியும் ஊக்கமாக இருக்கிறார்கள்”என்று தெரிவித்தார்

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசும்போது மேடையில் நிதின் கட்கரியும், சரத்பவாரும் இருந்தனர். ஆனால் இருவரும் அப்போது கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குபின் பூதாகரமாகியுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சரத் பவார், அஜித் பவார், பாஜக மூத்த தலைவர்கள் என அனைவரும் ஆளுநர் கோஷ்யாரிக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதி யாருக்கு? மானம் காக்குமா பாஜக? காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் போட்டி

பாஜக வட்டாரங்கள் கூறுகையில் “ பாஜக தலைமை கோஷ்யாரி குறித்து திருப்தியாக இல்லை. அவரின் சர்ச்சைக்குரிய பேச்சால் மேலிடம் அதிருப்தியாக இருக்கிறது. ஆதலால், கோஷ்யாரி பதவி பறிக்கப்படலாம் அல்லது வேறு ஏதாவது சிறிய மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்படலாம்.ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சால் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைகிறது. ஆதலால் ஏதாவது உறுதியான முடிவை டெல்லி மேலிடம் எடுக்கும். அதனால்தான் அவசரமாக கோஷ்யாரியை டெல்லிக்கு அரசு அழைத்துள்ளது “எனத் தெரிவித்தனர்.

உத்தவ் தாக்கரே நேற்று விடுத்த அறிக்கையில் “ பாஜகவாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, சிவாஜி குறித்த அவதூறு கருத்துக்களை ஏற்க கூடாது. ஆளுநருக்க எதிராக ஒன்றுதிரள வேண்டும். ஆளுரை மத்தியஅரசுக்கே பார்சல் செய்து அனுப்புங்கள்” எனத் தெரிவித்தார்

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் அவசரம், பரபரப்பு ஏன்? உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறுகையில் “ கோஷ்யாரி இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை நமது ஹீரோக்களுக்கு எதிராகத்  தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். நம் மதிப்புக்குரியவர்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதலாகும். பிரமதர், குடியரசுத் தலைவர் ஆகியோர் முடிவு செய்து, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios