கர்நாடக காவல்துறையில் 38ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பயன்படுத்தும் பிஎஸ்எல்எல்(BSNL) சிம்-கார்டே ரிலையன்ஸ் ஜியோ இணைப்புக்கு மாறுமாறு ரகசியமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காவல்துறையில் 38ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பயன்படுத்தும் பிஎஸ்எல்எல்(BSNL) சிம்-கார்டே ரிலையன்ஸ் ஜியோ இணைப்புக்கு மாறுமாறு ரகசியமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மொத்தமாக மாறாமல், படிப்படியாக ரிலையன்ஸுக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பு கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கர்நாடக மாநில காவல்துறையின் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து மற்றும் நவீனப்பிரிவு இயக்குநர் இது தொடர்பாக கடந்த திங்கள்கிழமை சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

இதே வேலையாபோச்சு! பெண் பயணி இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமி: இது விமானத்தில் இல்லீங்க!
இதில், 38ஆயிரத்துக்கும் மேலான போலீஸாரின் செல்போன் இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற்ற ஒப்புதல் கிடைத்துவிட்டது. ஆதலால் அனைத்துப் பிரிவு தலைமைகளும் படிப்படியாக தங்கள் இணைப்புகளை பிஎஸ்என்எல் தொடர்பிலிருந்து விலகி ஜியோவுக்கு மாறலாம் எனத் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 38,347 இணைப்புகள் ஜியோவுக்கு மாற உள்ளன.
கர்நாடக போலீஸாரின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ நெட்வொர்க் சேவையின் திறனை மேம்படுத்தும் முயற்சியாகவே பிஎஸ்என்எல் தொடர்பில் இருந்து ஜியோவுக்கு மாறுகிறோம்.
அதுமட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு கடினமாக இருக்கும் போலீஸாருக்கு ஜியோ இருந்தால் எளிதாக இருக்கும். போலீஸார் தங்கள் இருப்பிடம், புகைப்படங்கள், வீடியோக்களை தங்கள் மொபைல் போனில் இருந்து அனுப்ப டேட்டா வேகம் ஜியோவில் உள்ளது. பிஎஸ்என்எல் டேட்டா வேகம் போதவில்லை. ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி கொண்டுவர இருக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல் 4ஜிக்கு கூட மாறவில்லை. அவசரச சேவைக்காகவே ஜியோவுக்கு மாறுகிறோம்” எனத் தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சிகே குந்தனா கூறுகையில் “ கர்நாடக அரசு, போலீஸார் மட்டும் இப்படிச் செய்யவில்லை, ஏற்கெனவே மத்திய அரசின் பல்வேறு துறைகள் பிஎஸ்என்எல் தொடர்பை துண்டித்து, வேறு நெட்வொர்க்கிற்கு மாறிவிட்டனர். இந்தியன் ரயில்வே, தெலங்கானா போலீஸார் ஜியோவுக்கு மாறிவிட்டனர். இப்போது கர்நாடகாவிலும் இது வந்துவிட்டது.
தனியார் துறையை மேம்படுத்துவதற்காகவும், அரசால் வேண்டுமென்றே அக்கறையின்மையால் பாதிக்கப்பட்டு, மூடுவதற்கு பொதுத்துறை நிறுவனம் பலிகடா. சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் விஆர்எஸ் திட்டத்தில் 80ஆயிரம் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
உள்கட்டமைப்பில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலீடு செய்ய விரும்பவில்லை, 4ஜி சேவையையும் பிஎஸ்என்எல் தொடங்க அரசு அனுமதி தரவில்லை. ஆனால் 5ஜி ஸ்பெக்ட்ரம்மை தனியாருக்கு வழங்குகிறது, இது திட்டமிட்டு செய்யப்படும் செயல்” எனத் தெரிவித்தார்
