காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடக தரப்பில் வாதிடப்பட்டது. 

பின்னர் வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், நாடாளுமன்றம் அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச்நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக முறையிட மாநில அரசுக்கு உரிமையில்லை. நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு முறையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த கர்நாடக, தமிழக தரப்பு கோரிக்கையை ஏற்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசின் வாதங்களைத் தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே உத்தரவிட்டபடி 2000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை இதனை பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை இரு மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும், சி.எஸ். ஷா அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான வழக்கு நாளையும் தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.