கர்நாடக சிறையில் இருந்து தப்பியோடிய கைதி.. கடைசியில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | வைரல் வீடியோ
கர்நாடக சிறையில் இருந்து கைதி ஒருவன் தப்பிக்க 40 அடி சுவரில் குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.
23 வயதான வசந்த் என்ற சிறைக்கைதி சுவர் ஏறி குதித்து ஓடுவது தெரிந்தது. கடந்த வாரம் கர்நாடகாவில் உள்ள சிறையிலிருந்து தப்பிக்க 40 அடி எல்லைச் சுவரில் குதித்த கற்பழிப்பு குற்றவாளி, ஒரு நாள் கழித்து மீண்டும் பிடிபட்டார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை தாவணகெரே துணை சிறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்தக் காட்சிகளில், கற்பழிப்புக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது கைதியான வசந்த் சுவர் ஏறி குதித்து ஓடுவது பதிவாகி உள்ளது. ஒரு நாள் கழித்து ஹாவேரியில் இருந்து மீண்டும் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ரா மாவட்ட சிறையிலிருந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த பகுதியிலிருந்து மார்ச் மாதம் மூன்று கைதிகள் தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகையை விட அதிகமாக பணம் வைத்திருந்தால் அவ்ளோதான்.. ஐடி ரெய்டு உறுதி - எவ்ளோ தெரியுமா.?