Karnataka minister Meets Sasikala at Parappana Agrahara

சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடகாவில் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் புதிய உள்துறை அமைச்சராக, ராமலிங்க ரெட்டி, சமீபத்தில் பொறுப்பேற்றார். 

இந்நிலையில் முதன் முறையாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்று ராமலிங்க ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள சசிகலா அறைக்கு சென்றார். 

அமைச்சர் ராமலிங்க ரெட்டியை பார்த்ததும், எழுந்து வந்த சசிகலா, ''வணக்கம்,'' என சொல்ல, பதிலுக்கு அமைச்சரும் வணக்கம் தெரிவித்துள்ளார். 

''நலமாக இருக்கிறீர்களா; சாப்பிட்டீர்களா,'' என, சில கேள்விகளை, தமிழிலேயே அவர் கேட்க, சசிகலாவும் பதிலளித்து, சிரித்துள்ளார். இந்த சந்திப்பில் இளவரசியும் உடனிருந்ததாக, ராமலிங்க ரெட்டி பேட்டியில் கூறியுள்ளார்.