கர்நாடகாவில் மினி பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13  பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியை அடுத்த தார்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது இட்டிகட்டி என்ற கிராமத்தின் அருகே  மினி வேன் மீது டிப்பர்  லாரி ஒன்று மோதியது. இதில், 2 வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மேலும் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

மேலும், 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர்கள் தாவணகெரே  மாவட்டம், வித்யாநகரை சேர்ந்தவர்கள் என்றும், அனைவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் தாவணகெரே  மாவட்டம், வித்யாநகரை சேர்ந்தவர்கள் என்றும், அனைவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் தெரிய வந்தது. வெவ்வேறு இடத்தில் திருமணம் முடிந்து, வெவ்வேறு நிறுவனங்களில் இவர்கள் வேலை  பார்த்து வந்தாலும், அரசு விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா  செல்வது வழக்கம் அவ்வாறு இந்தாண்டு செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இவர்களது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.