கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்ட வழக்கில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்ட வழக்கில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியுசி கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனுத் தாக்கல் செய்தனர்.
இமாச்சலப்பிரதேச ஐஐடி கல்வி நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் அணிவது என்பது முஸ்ஸிம் மதத்தின கட்டாய நடைமுறை கிடையாது, சீருடை அணிய வேண்டிய அரசுக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது” என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் 15ம்தேதி உத்தரவிட்டது
இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தை மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா இரு மாறுபட்ட தீர்ப்பை இன்று அளித்தனர்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு
இதில் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார், ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தும், நீதிபதி சுதான்சு துலியா உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கடந்து வந்த பாதை:
ஜனவரி 1, 2022: கர்நாடக உடுப்பியில் உள்ள ப்ரீ காலேஜ் யுனிவர்சிட்டியில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுமதிக்க மறுத்தனர்
ஜனவரி 16: முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து செல்ல தடைவிதிக்ககப்பட்டது. இதனால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்
ஜனவரி 26: ஹிஜாப் விவகாரத்தை தீர்க்க கர்நாடக அரசு விசாரணைக் குழுவை அமைத்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆய்வு செய்வோம்: மத்திய அரசு, ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ஜனவரி 31: ஹிஜாப் கட்டுப்பாடுகளை எதிர்த்து முஸ்ஸிலம் மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு. ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்று என வாதிட்டனர்.

பிப்ரவரி 5: வகுப்பறையில் மாணவிகள் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை
பிப்ரவரி 8: உடுப்பி மாவட்டகல்லூரிகளில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல்
பிப்ரவரி 9: ஷிவமோகா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தல், வன்முறை ஏற்பட்டது.
பிப்ரவரி 9: அனைத்துப் உயர் நிலைப் பள்ளிகளையும் சில நாட்களுக்கு மூட கர்நாடக முதல்வர் உத்தரவு
பிப்ரவரி 10: கல்லூரிகளைத் திறக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆனால் மாணவர்கள் எந்தவிதமான துணியையும் தலையில் அணிவதற்கு வழக்கு முடியும்வரை தடை

பிப்ரவரி 11: உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
மார்ச் 15: முஸ்லிம் மதம் கடைபிடிக்கும் வழக்கில் ஹிஜாப் அத்தியாவசியமானது அல்ல, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்த மாநில அரசு உத்தரவு சரி என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஜூன் : கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஜூலை 13: கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்பு

செப்டம்பர் 22: இரு தரப்பு வாதங்கள் முடிந்து, தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
அக்டோபர் 13: ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது
