Asianet News TamilAsianet News Tamil

500 கிராமங்களுக்கு இலவச ‘வை-பை’ இணையதள வசதி - கர்நாடக அரசு  அதிரடி

Karnataka Government has launched a free Wi-Fi Internet facility for 500 villages in the state yesterday.
Karnataka Government has launched a free Wi-Fi Internet facility for 500 villages in the state yesterday.
Author
First Published Nov 17, 2017, 9:03 PM IST


கர்நாடக மாநிலத்தில் 500 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதியை நேற்று  முதல் முறைப்படி முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு தொடங்கி உள்ளது.

மொத்தம் 2600 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதி செய்துதரப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்த நிலையில், முதல்கட்டமாக 500 கிராமங்களுக்கு வழங்கியுள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் மூலம் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மூலம், 90 சதவீத கிராமங்களுக்கு இலவச இணையதள வை-பை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோதனை முயற்சியாக 11 கிராமங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்திப் பார்க்கப்பட்டது. இது வெற்றி பெற்ற நிலையில், அனைத்து கிராமங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.

கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வை-பை இணையதள வசதி, அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிடைக்கும். கிராம மக்கள் முதல் 100 எம்.பி. க்கு அதிவேகத்தில் இணையதளத்தை பயன்படுத்தலாம் அதன்பின் வேகம் குறையும்.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துக்கு தலைமை இடமாக பெங்களூரு இருந்து வருகிறது. பயோடெக், தகவல் தொழில்நுட்பத்தில் பெங்களூரையும், கர்நாடக மாநிலத்தையும் உலகில் தலைசிறந்த இடமாக மாற்றுவது எனது கனவாகும். அதற்கான  பணியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios