கர்நாடகாவில் ஓலா, ஊபர் உள்ளிட்ட அனைத்து டாக்ஸி சேவைகளுக்கும் இனி ஒரே சீரான கட்டணம் : எவ்வளவு தெரியுமா?

வாடகை கார், டாக்சி மற்றும் உபெர் மற்றும் ஓலா போன்ற ஆப்-அடிப்படையிலான கேப் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஒரே சீரான கட்டண முறையை, கர்நாடக போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Karnataka Government Announces New Uniform Fare Structure for Cabs in Bengaluru Rya

வாடகை கார், டாக்சி மற்றும் உபெர் மற்றும் ஓலா போன்ற ஆப்-அடிப்படையிலான கேப் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஒரே சீரான கட்டண முறையை, கர்நாடக போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் திருத்தப்பட்ட டாக்சி சேவைகளுக்கான கட்டணங்கள், உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணக் கட்டமைப்பின் கீழ், கர்நாடகாவில் உள்ள வாகனங்கள் மூன்று வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

அதன்படி, கர்நாடகாவில் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையுள்ள வாகனங்களுக்கு: 4 கிலோமீட்டர் வரை குறைந்தபட்ச கட்டணம் ரூ. 100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு அடுத்தடுத்த கிலோமீட்டருக்கும் ரூ.24 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

கர்நாடகாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை கொண்ட வாகனங்களுக்கு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.115 ஆகவும், கிலோமீட்டருக்கு ரூ.28 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. - கர்நாடகாவில் ரூ. 15 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள வாகனங்களுக்கு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.130 ஆக உயர்த்தப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாக்சிகளுக்கான கட்டணத்தை கர்நாடக அரசு நிர்ணயித்தது ஏன்?

இந்த உத்தரவு, கர்நாடகாவில் உள்ள  பயணிகளுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் வகையில், வாகன உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அமைப்பைத் தாண்டி கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதைத் தடை செய்கிறது. மேலும் டாக்ஸி மற்றும் கேபின் காத்திருப்பு கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி ஐந்து நிமிடங்கள் இலவசம் மற்றும் அதைத் தொடர்ந்து காத்திருக்கும் நேரம் நிமிடத்திற்கு 1 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவு, ஓலா, ஊபர் நிறுவனங்கள் 5 சதவீத ஜிஎஸ்டி மற்றும் பயணிகளிடம் டோல் கட்டணங்களை விதிக்க அனுமதிக்கிறது. மேல, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் விதிக்க அனுமதிக்கப்படுகிறது, இந்த நேரங்களில் கூடுதலாக 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய கட்டணக் கட்டமைப்பை அமல்படுத்துவது, பயணிகள் மற்றும் சேவை வழங்குநர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், டாக்ஸி தொழிலை திறம்பட ஒழுங்குபடுத்தும் கர்நாடக அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையானது டாக்ஸி சேவைகள் குறைந்த விலையில் கிடைக்கவும் அணுகல்தன்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios