Asianet News TamilAsianet News Tamil

கொளுத்திய வெயில்.. காரில் இருந்து மயங்கி விழுந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா - வைரல் வீடியோ.!

முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் ஏறும் போது சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Karnataka election 2023: Siddaramaiah collapses while campaign video goes viral
Author
First Published Apr 29, 2023, 2:35 PM IST | Last Updated Apr 29, 2023, 2:35 PM IST

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என அனைத்து கட்சிகளும் களத்தில் சுற்றி சுழன்றுகொண்டிருக்கின்றனர்.

கர்நாடகாவில் உள்ள குட்லிகியில் வெயில் அதிகமாக இருந்ததால், முன்னாள் முதல்வர் சித்தராமையா மயக்கம் காரணமாக கீழே விழுந்தார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் என்டி ஸ்ரீனிவாஸுக்காக பிரச்சாரம் செய்தார்.  அவர் ஹெலிகாப்டர் வழியாக வந்திருந்தார். 

Karnataka election 2023: Siddaramaiah collapses while campaign video goes viral

அப்போது அவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். கார் அருகே வந்த அவர், தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு சிறிது நேரத்தில் அப்படியே கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த உதவியாளர்கள் குளுக்கோஸ் தர, அதனை சாப்பிட்ட பிறகு அவர் குணமடைந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios