Asianet News TamilAsianet News Tamil

சித்தராமையாவை திப்பு சுல்தானுடன் ஒப்பிடும் நூலை வெளியிடத் தடை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா பற்றி எழுதப்பட்டுள்ள நூலை வெளியிட அம்மாநில நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Karnataka court stays release of book on Siddaramaiah
Author
First Published Jan 9, 2023, 4:38 PM IST

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா பற்றி கன்னடத்தில் ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. ‘சித்துவின் நிஜகனசுகலு’ (சித்துவின் நிஜக் கனவுகள்) என்று தலைப்பிடப்பட இந்த நூலை வெளியிட தடை விதிக்கக் கோரி சித்தராமையா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் இந்நூலை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நூல் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையாவின் ஆட்சியை குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைசூரை ஆட்சி செய்த மன்னர் திப்பு சுல்தானுடன் சித்தராமையாவை ஒப்பிடும் பகுதிகள் இந்நூலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் இந்த நூலை எடுத்து சித்தராமையா தரப்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சித்தராமையா, “எனக்கு எதுவும் தெரியாது. காமாலைக்காரன் கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பது போலத்தான் இருக்கிறது. திப்பு சுல்தான் போல வேடமிட்டு கையில் வாள் ஏந்தி நின்றது யார்? எடியூரப்பா, ஷோபா கரந்த்லாஜே ஆகியோர்தான். ஷேக் அலி திப்பு சுல்தான் பற்றி எழுதிய நூலுக்கு முன்னுரை எழுதியது யார்? இதெல்லாம் இரட்டை வேடம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்தலுக்கு முன் என்னை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே இப்படி ஒரு புத்தகத்தை வெளியிட முயல்கிறார்கள். அந்த நூல் முழுக்க முழுக்க அவதூறானது. நான் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வேன்” என்றும் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீடு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Modi Archive: பிரதமர் மோடியின் இளமைக்கால வெளிநாட்டுப் பயணங்கள்!

ஆனால், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சி. என். அஷ்வத் நாராயணன் தான் திட்டமிட்டபடி நூல் வெளியிட்டில் கலந்துகொள்ளப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் சலவாடி நாராயணசாமியும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இவருடன் எழுத்தாளரும் கர்நாடக படாநூல் மதிப்பீட்டுக் குழுவின் தலைவருமான ரோஹித் சக்ரதீர்த்தா, பத்திரிகையாளர் சந்தோஷ் தம்மையா, எழுத்தாளர் சமூக செயல்பாட்டாளர் மற்றும் ராகேஷ் ஷெட்டி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதாக அழைப்பிதழிலிருந்து தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios