Asianet News TamilAsianet News Tamil

ஒருத்தரும் காப்பியடிச்சு எழுத முடியாது..! விநோத முறையில் தேர்வு நடத்திய கல்லூரி நிர்வாகம்..!

கர்நாடகாவில் தேர்வின் போது காப்பியடித்து எழுதுவதை தடுக்க, மாணவர்கள் தலையில் அட்டை பெட்டி மாட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

karnataka college took different step to stop copying in exam
Author
Karnataka, First Published Oct 19, 2019, 4:49 PM IST

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடைபெறும் சமயங்களில் மாணவர்கள் சிலர் காப்பியடித்து எழுதி முறைகேடுகளில் ஈடுபடுவார்கள். இதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதையும் மீறி சில காப்பியடித்து எழுதி மாட்டிக்கொள்வார்கள்.

karnataka college took different step to stop copying in exam

இதனிடையே தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க கர்நாடகாவில் இருக்கும் ஒரு கல்லூரி வித்தியாசமான நடைமுறையை கையாண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் இடைநிலைத் தேர்வு நடைபெற்றிருக்கிறது. அப்போது தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க நினைத்த கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் தலையில் அட்டை பெட்டியை அணியச் செய்துள்ளது.

karnataka college took different step to stop copying in exam

அதை அணிந்தால் மாணவர்கள் அருகில் இருப்பவர்கள் யாரையும் பார்க்க முடியாது. தேர்வு தாளை பார்ப்பதற்கு வசதியாக முன்னால் மட்டும் ஓட்டை போடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பலர் கிண்டலடித்து வரும் நிலையில், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios