எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது எனவும் வேண்டுமென்றே என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நீண்ட நேரம் காக்க வைத்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 

ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்று சென்னை விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது திடீரென கார்த்தி சிதம்பரத்திற்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். 

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது எனவும் வேண்டுமென்றே என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நீண்ட நேரம் காக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.