உத்தரபிரதேசத்தில் நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி படியேறும் போது தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் கங்கை நதி மேலாண்மை தொடர்பான முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

 

இதையடுத்து, கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் பணிகளை அந்த நதியில் படகில் பயணித்தபடியே பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னர், படியில் பிரதமர் மோடி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். உடனே அவருடன் சென்ற பாதுகாவாலர் பிரதமர் மோடியை தூக்கிவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.