Asianet News TamilAsianet News Tamil

தங்கமங்கை பி.டி. உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... கான்பூர் ஐஐடி அறிவிப்பு!!

kanpur iit announces doctrate for PT usha
kanpur iit announces doctrate for PT usha
Author
First Published Jun 15, 2017, 2:45 PM IST


இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி. உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கான்பூர் ஐஐடி முடிவு செய்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த இந்திய தடகள விளையாட்டு வீரர் பி.டி. உஷா, 1979 ஆம் ஆண்டில் இருந்து விளையாடடு துறையில் பங்கேற்று வருகிறார். இந்திய தடகளங்களின் அரசி என வர்ணிக்கப்படும் பி.டி. உஷா, பய்யோலி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகிறார்.

பி.டி. உஷா, கேரளாவில் உள்ள கொயிலாண்டியில் தடகள பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பி.டி. உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கான்பூர் ஐஐடி முடிவுசெய்துள்ளது. சில துறைகளில் பெரும் சாதனை படைப்பவர்களுக்கும், அந்த துறையின் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், தடகள விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை பி.டி. உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கான்பூர் ஐஐடி முடிவு செய்துள்ளது.

சர்வதேச தடகளப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள பி.டி. உஷா, ஏற்கனவே பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகள் வழஙகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios