Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.!

டெல்லியில் திமுக எம்.பி. கனிமொழி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
 

Kanimozhi who suddenly met Mamata in Delhi... Team mobilization against Modi government
Author
Delhi, First Published Jul 29, 2021, 10:22 PM IST

டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்து பேசினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “தற்போது பாஜக வலிமையான கட்சியாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் நிச்சயம் வரலாறு படைக்கலாம். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு அதுவே நம்பிக்கையாகும்.” என்று தெரிவித்திருந்தார். மேலும், “பாஜகவைத் தோற்கடிக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.” என்றும் மம்தா தெரிவித்திருந்தார். Kanimozhi who suddenly met Mamata in Delhi... Team mobilization against Modi government
இந்நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரையும் மம்தா சந்தித்து பேசினார். இதற்கிடையே டெல்லியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் டெல்லி வீட்டில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டன என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்த நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios