cji india: cji of india: அடுத்த தலைமை நீதிபதி இவர்தானா! வரலாற்று சிறப்பு தீர்ப்புகளை வழங்கியவர்
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் உதய் உமேஷ் லலித்தை அடுத்த தலைமை நீதிபதியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் உதய் உமேஷ் லலித்தை அடுத்த தலைமை நீதிபதியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு யு.யு.லலித்தை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்திருப்பதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சிபிஐ சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக செயல்பட்டது யுயு லலித் என்பது குறிப்பிடத்தக்கது. 2022, நவம்பர் 8ம்தேதிவரை யுயுலலித் பதவிக்காலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை யுயு லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும், அவர் இரு மாதங்கள் மட்டுமே பதவி இருப்பார் எனத் தெரிகிறது.
குரங்கு அம்மையை தடுக்க தடுப்பூசியா? மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய சீரம் சிஇஓ!!
தலைமை நீதிபதியாக இருந்த எஸ்ஏ.போப்டே ஓய்வுக்குப்பின் என்.வி.ரமணா கடந்த 2021, ஏப்ரல் 24ம் தேதி தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.இவரின் பதவிக்காலம் வரும் 26ம்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைமைநீதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அலுவலகத்திலிருந்து இருந்து தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது. அதில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம், அடுத்த மூத்த நீதிபதி யார் என்று கேட்டு அனுப்பப்பட்டது
தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவுக்கு அடுத்ததாக மூத்த நீதிபதியாக யு.யு.லலித் மட்டுமே இருக்கிறார். ஆதலால், யுயுலலித்தை பரிந்துரை செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயரந்த 2வது நீதிபதி என்ற பெருமையைப் பெறுவார். உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக வரும் 27ம் தேதி யுயுலலித் பதவி ஏற்கலாம்.
பாஜவில் இருந்து வந்தவருக்கு அமைச்சர் பதவி.. மம்தா பானர்ஜி போட்ட புது ஸ்கெட்ச் !!
கடந்த 1971ம் ஆண்டு 13-வது தலைமை நீதிபதியாக இருந்த எஸ்எம் சிக்ரி, வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் வழக்கறிஞர் ஆவார்.
யு.யு.லலித் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக முத்தலாக் முறையை ஒழித்து வழங்கிய தீர்ப்பு பிரபலமானது.
மூத்த வழக்கறிஞராக இருந்த லலித், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2014, ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்டார்.
வரலாற்று சிறப்பு தீர்ப்புகள்
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு, முத்தலாக் முறை சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய அரசியல்சாசன அமர்வில் லலித்தும் அடங்கி இருந்தார்.
இந்த தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர், எஸ் அப்துல் நசீர், குரியன் ஜோஸப், ஆர்எப் நாரிமன் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது யுயு லலித் மட்டுமே பதவியில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியதும் யுயு லதித் அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் உடலை, உடலின் எந்த அந்தரங்க உறுப்பையும் தொடுதல், பாலியல் உள்நோக்கத்துடன் தொடுதல் போக்ஸோ சட்டத்தின் பிரிவு-7ன் கீழ் வரும் என்று யுயுலலித் தலைமையிலான அமர்வு தீர்ப்புவழங்கியது.
உடலோடு உடல் உரசுவது, பாலியல் உறுப்புகளை தொடுவது பாலியல் சீண்டலில் வராது என்று மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதி யுயுலலித் ரத்து செய்தார்.
கடந்த 1957ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பிறந்த யுயு லலித், 1983ம் ஆண்டு ஜூனில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அதன் பின் 1985ம் ஆண்டு டிசம்பர் வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்தார். அதன்பின் 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி வந்த யுயுலலித், 2004ம் ஆண்டுவரை டெல்லியில் பயிற்சி எடுத்து, மூத்த வழக்கஞராக பதவி உயர்ந்தார்