Asianet News TamilAsianet News Tamil

Jupiter closest to Earth: இன்று இரவு வானில் ஒரு அதிசயம் மிஸ் செய்தால் 2129 ஆம் ஆண்டு வரை காத்திருக்கணும்!!

வரலாற்றில் 59 ஆண்டுகளுக்குப் பின்னர், வியாழன் கோள் இன்று இரவு பூமிக்கு மிக அருகே வருகிறது. இன்னும் 107 ஆண்டுகளுக்கு இது நிகழாது. இது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு அருகில் மீண்டும் பார்க்க முடியாது என்பதால், இது ஒரு தவிர்க்க முடியாத வான் நிகழ்வாக அமைகிறது. 

Jupiter coming closest to earth Today: when how to watch it in naked eyes
Author
First Published Sep 26, 2022, 2:34 PM IST

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரிய கோள் வியாழன். இந்தக் கோள் இன்று இரவு  பூமியிலிருந்து வெறும் 59 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கோள் இருக்கும். இதனால், ​​​​இரவு நேரத்தில் வானத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக வியாழன் கோள் தோன்றும். 

"வியாழன் கோள் 13 மாதங்களுக்கு ஒரு முறை இதுபோன்று எதிர் திசையில் தோன்றி பிரகாசமாக, சாதாரண நாட்களில் தோன்றுவதை விட உருவத்தில் பெரிதாக காணப்படும். 1963 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் வருகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. பூமியும் வியாழனும் சரியான வட்டங்களில் சூரியனைச் சுற்றி வராததால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த இரண்டு கோள்களும் வெவ்வேறு தொலைவுகளில் கடந்து செல்லும். 

மகிழ்ச்சி செய்தி !! ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனி ரயில்களில் புதிய வசதி அறிமுகம்..

கொல்கத்தாவில் உள்ள எம்பி பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, வழக்கமான பிரகாசத்தைவிட, வியாழன் கோள் வானத்தில் 2.9 ரிக்டர் அளவில் பிரகாசமாகத் தோன்றும். இந்தக் கோள் 53 சந்திரன்களைக் கொண்டுள்ளது. இந்த கிரகம் இன்று இரவு முழுவதும் வானில் பிரகாசமாக காணப்படும். பூமிக்கு மிக அருகில்  இன்று மாலை 5:29 மணிக்குப் பிறகு பிரகாசமாக தோன்றி,  நாளை (செப்டம்பர் 27 ஆம் தேதி) காலை 5:31 மணி வரை வானில் தெரியும். வெறும் கண்ணிலும் பார்க்கலாம். பைனாகுலர், டெலஸ்கோப் மூலமும் பார்க்கலாம். 

Jupiter coming closest to earth Today: when how to watch it in naked eyes

நாடு முழுவதும் வியாழன் கோள் தெரியும். மேலும், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் உள்ள மக்கள் இருட்டாகும்போது பிரகாசமான இந்தக் கோளை பார்க்க முடியும். மீண்டும், 2129 ஆம் ஆண்டுதான் பூமிக்கு அருகில் வியாழன் கோள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு !! சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 ஐஐடி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி..

Follow Us:
Download App:
  • android
  • ios