நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உயர் நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
தங்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படலாம் எனவும் அதனால், தொலைபேசியில் பேச வேண்டாம் என்று நீதிபதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை நான் கேட்டேன். அப்போது, நீதிபதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க முடியாது என்று கூறிய போது, அனைத்து போன்களும் ஒட்டுகேட்கப்படக்கூடும் என்று அவர்கள் பதிலளித்தனர்.
இது உண்மையா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இதுதொடர்பாக நீதிபதிகள் மத்தியில் பரவலாக அச்சம் நிலவுகிறது என்றும்,
ஒட்டுகேட்கப்படுவது உண்மையாக இருந்தால், நீதித்துறையின் சுதந்திரம் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் இது என்று அவர் தெரிவித்தார்.
விழா மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
