Asianet News TamilAsianet News Tamil

2G ஸ்பெக்ட்ரம் ஊழல்... ஆகஸ்டில் தீர்ப்பு!!

judgement on 2g spectrum case
judgement on 2g spectrum case
Author
First Published Jul 5, 2017, 10:58 AM IST


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியின் போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தததில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 

சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி, தொலைத்தொடர்புத் துறை செயலாளர்கள், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள்

இந்த நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்கள் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனியிடம் கேட்டனர். 

அதற்கு பதிலளித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறினார். 

ஆகஸ்ட் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்க முடியாவிட்டால் அடுத்த 10 அல்லது 15 நாட்களுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios