He was a judge of the Madras High Court cieskarnan In February last year was transferred to the Calcutta High Court.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து,
அதற்கு கர்ணன் தடை விதித்தார்.
மேலும் இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி கர்ணன், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச் சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார். அதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது
பகிரங்கமாக புகார்களை கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், அவமதிப்பு வழக்காக எடுத்து கொண்டது. 
இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதி கர்ணன் பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், நீதிபதிகளையும் நீதிமன்றத்தின் மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் புகார்கள் உள்ளன. அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். இதற்கு முடிவு எடுக்காவிட்டால், நீதிமன்றம் மீது மக்களுக்கு உள்ள மரியாதை குறைந்துவிடும் என எதிர் தரப்பினர் கூறினர்.
அதற்கு, உச்சநீதிமன்றம் இதுவரை இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததில்லை. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் முன்மாதிரியாக அமையும். எனவே, ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும்போது, அனைத்து
நடைமுறைகளையும் பின்பற்றி கவனமுடன் செயல்பட வேண்டும். நீதிபதி கர்ணனிடம் இருந்து பல கடிதங்கள் வந்துள்ளன. இருப்பினும், அவரது கருத்தையும் கேட்க விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால்,
அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து 2 முறை அவர் ஆஜராகாமல் இருந்துவிட்டார். இதேபோல், அவரது தரப்பில் வழக்கறிஞரும் நியமிக்கவில்லை.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கர்ணன்
ஆஜராகவில்லை.
இதுதொடர்பாக நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டபோதிலும், கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. இதேபோல், அவரது தரப்பில் வழக்குறிஞரையும் நியமிக்கவில்லை. உச்ச
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் போனதற்கான காரணங்களும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வழக்கு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி
வைத்து, மார்ச் 10ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர்.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்ச
நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப்பதிவு செய்தது.
இதற்கிடையில், உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அந்தக் கடிதம் பதிவு செய்யப்பட்டது. அதில், நீதிபதி
கர்ணன் தாம் தலித் என்பதால் பழிவாங்கப்படுவதாகவும், ஆதலால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன், தனக்காக இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்ற நடவடிக்கையில்
தலையிடுவதற்காக அந்த வழக்கறிஞர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு ஏற்கனவே இரண்டு முறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று
விசாரணைக்கு வந்தது. அப்போதும், நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. இதைதொடர்ந்து, நீதிபதி கர்ணனுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதிகள், மார்ச் 31ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.