அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார்.

இதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து,நீதிபதி கர்ணன் மீது, உச்சநீதிமன்றம் தானாகவே, முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என வாரன்ட் பிறப்பித்தது.

ஆனாலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கும் கர்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தல், இன்று ஆஜரானார். 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ஆஜராகி, தனது வாதத்தை முன் வைத்தார்