கர்நாடகாவில் நீதிபதிக்கு கத்திக்குத்து.

கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத ஷெட்டியை அவரது அலுவலகத்தில் வைத்து கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் லோக் ஆயுக்தா அலுவகத்திற்கு புகார் கொடுக்க வந்த தேஜாஸ் சர்மா என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், நீதிபதி விஸ்வநாத ஷெட்டியை பல முறை கத்தியால் குத்தி உள்ளார்.

தேஜாஸ் சர்மா தன்னை,ஒருவழக்கறிஞர் என பெயர் பதிவிட்டு  உள் சென்று உள்ளார்.பின்னர் சத்தம் கேட்டு உள்நுழைந்த அங்கிருந்த பாதுகாவலர்கள் தேஜாஸ் சர்மாவை கைது செய்தனர்.

அதனை  தொடர்ந்து  ரத்த வெள்ளத்தில்  மிதந்து கொண்டிருந்த நீதிபதியை  உடனடியாக மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். முதற்கட்ட சிகிச்சைக்கு பின், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

முதல்வர் சித்தராமையா, மருத்துவமனைக்கு நேரில் சென்று நீதிபதியிடம் நலம் விசாரித்தார்.தற்போது தேஜாஸ் ஷர்மா கைது செய்யப்பட்டு,தீவிர விசாரணை பிடியில் உள்ளார்.