சனாதன கலாச்சாரத்தை இழிவுபடுத்த இந்தியா கூட்டணிக்குள் போட்டி: ஜே.பி. நட்டா தாக்கு!
சனாதன கலாச்சாரத்தை இழிவுபடுத்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இடையே போட்டி நிலவுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சாடியுள்ளார்
பாஜக தலைவர் ஜேபி நட்டா எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன கலாச்சாரத்தை இழிவுபடுத்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இடையே போட்டி நிலவுவதாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனதுய் ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா கூட்டணி இரண்டு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முதல் விஷயம் சனாதன கலாச்சாரத்தை சபிப்பது. சனாதன கலாச்சாரத்தை யார் அதிகம் துஷ்பிரயோகம் செய்யலாம் என்று அக்கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இரண்டாவது விஷயம், ஊடகங்களை அச்சுறுத்துவது. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகிறார்கள்ல் வழக்கு போடுகிறார்கள். இது உண்மையில் நாஜி பாணியிலான தாக்குதல். எமர்ஜென்சி கால மனநிலைகள் அக்கட்சிகளிடையே உயிர்ப்புடன் இருக்கின்றன.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழுவில் 14 பேர் இடம்பெற்றிருக்கும் நிலையில், 12 பேர் கலந்து கொண்டதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
அக்கூட்டத்தில், தொலைக்காட்சி சேனலில் எந்த தொகுப்பாளர் நடத்தும் விவாதத்துக்கு இந்தியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பலாம் என்பதை தீர்மானிக்க ஊடகங்களுக்கான துணைக் குழுவுக்கு ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் அளித்தது. தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத தொகுப்பாளர்களை புறக்கணிக்கவும் எதிர்க்கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை! இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை ஒழிக்க விரும்புகிறது: பிரதமர் மோடி குமுறல்
அதேபோல், “டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்.” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநியின் இந்த் அபேச்சுக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.