ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்! கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம், இலவச பால் விநியோகம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு, தினம் தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசிய பெண் பாஜக தொண்டர்!
கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் விரைவாக வெளியேற்றுவதை உறுதிசெய்யும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கர்நாடகாவில் செயல்படுத்த உள்ளதாகவும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:
1. வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை மாதங்களில் மூன்று சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
2. அடல் ஆஹாரா கேந்திரா மூலம் ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலையில் உணவு வழங்கப்படும்.
3. வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் தினமும் 1/2 லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும்.
4. சீரான குடிமைச் சட்டம் அமல்படுத்தப்படும்.
5. வீடற்றவர்களுக்கு 5.10 லட்சம் வீட்டு மனைகள்.
6. அரசுப் பள்ளிகளை முழுமையாக மேம்படுத்த விஸ்வேஸ்வரய்யா வித்யா திட்டம்.
7. மூத்த குடிமக்களுக்கான இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை.
8. மைக்ரோ ஸ்டோரேஜ் வசதிகளை அமைக்க ரூ.30,000 கோடி வேளாண் நிதி.
9. கல்யாண் கர்நாடகாவில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.1500 கோடி.
10. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் முறை ஒழிக்கப்படும்.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். தற்போதைய பாஜக சார்பில் 707 பேர், காங்கிரஸிலிருந்து 651 பேர், சுயேச்சையாக 1,720 பேர் என மொத்தம் 3,632 வேட்பாளர்கள் கர்நாடக தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
களைகட்டிய திருச்சூர் பூரம் கொண்டாட்டம்! அதிகாலை வானவேடிக்கையுடன் முடிகிறது!