பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அத்துமீறிய, அநாகரிக அரசியல் செய்துவருகிறது. பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து வெறுப்பு அரசியல் செய்யும் ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விளாசியுள்ளார் ஜேபி நட்டா.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜேபி நட்டா, அவநம்பிக்கையும் வெட்கமின்மையும் இணைந்து ஒரு இடத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது. காங்கிரஸ் கட்சி அவையிரண்டையும் ஒருசேர பெற்றிருக்கும் கட்சி. வெறும் பேச்சில் மட்டும் ஒழுக்கம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் தனது தாய் வலியுறுத்துவதை, வெறுப்பு, கோபம், பொய் அரசியலின் மூலம் பூர்த்தி செய்கிறார் மகன்(ராகுல் காந்தி).

பஞ்சாப்பில் பிரதமரின் உருவ எரிப்பு நாடகத்தை ராகுல் காந்தி நடத்துவது வெட்கமாக இருக்கிறது; ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை; எதிர்பார்க்கப்பட்டதுதான். நேரு-காந்தி குடும்பம், ஒருபோதும் பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குமான மரியாதையை கொடுத்ததில்லை. 2004-2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியே அதற்கு எடுத்துக்காட்டு.

வெறுப்பு அரசியலை துர்நாற்றம் வீசும் ஒரு அரசியல் கட்சி என்றால் அது காங்கிரஸ் தான். ராஜஸ்தானில்(காங்கிரஸ் ஆளும் மாநிலம்) எஸ்.சி., எஸ்.டி., சமூக மக்களின் மீதான அத்துமீறல், பஞ்சாப்பில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பஞ்சாப்பில் அமைச்சர்கள் ஸ்காலர்ஷிப் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுரிமையை காங்கிரஸ் கட்சி மற்றவர்களுக்கு கொடுத்ததேயில்லை. மாற்றுக்கருத்து உடையவர்களை அவமதிப்பதை காலங்காலமாக செய்துவருகிறது காங்கிரஸ். எமர்ஜென்சி காலத்தில் அதை பார்த்திருக்கிறோம். அதன்பின்னர் ராஜீவ் காந்தி அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தை பறித்தது.

எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுப்பது, பேச்சுரிமையை பறிப்பது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தான் காங்கிரஸ் பாணி அரசியல். காங்கிரஸ் ஆதரவுடன் செயல்படும் மகாராஷ்டிராவை பாருங்கள்.. ஆட்சி செய்வதை தவிர மற்ற அனைத்தையும் செய்கிறார்கள்.

வறுமையிலிருந்து வந்த பிரதமர் மீது குடும்ப அரசியல் கட்சி வெறுப்பை காட்டுவது வரலாறு. அதேவேளையில் மக்கள் பிரதமர் மீது காட்டும் அன்பும் பிரதமர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வரலாறே என்று ஜேபி நட்டா காங்கிரஸை கடுமையாக விளாசியுள்ளார்.